நாச்சியார் – திரைவிமர்சனம்

455
Theneo tv tamil ratings
  • Ratings

Summary

வழக்கமான படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அழுத்தமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா.

2.5

நடிகர்கள்  ஜி வி பிரகாஷ்குமார்,ஜோதிகா
இயக்குனர்  பாலா 
இசை  இளையராஜா
ஒளிப்பதிவு  ஈஸ்வர் 

கதை:

போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, 18 வயதுக்குட்டபட்டவர் என்பதால் அவரை சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார். கற்பழிக்கப்பட்ட இவானாவை தனது கட்டுப்பாட்டில், தனது வீட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார்.

பின்னர் ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் – இவானா காதலித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குழந்தை – ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ. ஒத்துப் போகாததையடுத்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்பாவி என்பது தெரியவருகிறது.

இதையடுத்து இவானாவை கற்பழித்த குற்றவாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் ஜோதிகா, அதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். இவானாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார்.

கடைசியில் இதற்கு காரணமாக குற்றவாளியை ஜோதிகா கண்டுபிடித்தாரா? அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா? கடைசியில் ஜி.வி பிரகாஷ் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜோதிகா இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக அவரது கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகுளித்தனத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடனான காதல் காட்சிகளில் இவானா ரசிக்க வைத்திருக்கிறார்.மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.

வழக்கமான படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அழுத்தமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். பாடலிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது.