மனுஷனா நீ – திரைவிமர்சனம்

364
Theneo tv tamil ratings
  • Ratings

Summary

வித்தியாசமான கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஸாலி. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார். மருத்துவ துறை குற்றங்களை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். அது ஓரளவிற்கு அமைந்திருக்கிறது.

1.5

Manusana Nee Movie Posters
நடிகர்கள்  ஆதர்ஷ்,அனு கிருஷ்ணா
இயக்குனர்  கஸாலி
இசை  கஸாலி
ஒளிப்பதிவு  அகரன்

 

கதை: படத்தின் தொடக்கத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். இதை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலித்து வருகிறார்கள். ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார்.

எப்படியாவது அந்த இடத்தை அடைவதற்கா பல சூழ்ச்சிகளை செய்கிறார் சுப்பு பஞ்சு. இதனால் கோபமடையும் ஆதர்ஷ், சுப்பு பஞ்சுவை தாக்க நினைக்கிறார். ஆனால், சுப்பு பஞ்சுவின் ஆட்கள் ஆதர்ஷை அடித்து விடுகிறார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதர்ஷ்.

அங்கு, தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆதர்ஷுக்கு மருத்துவமனையின் டீன் கஸாலி ஒரு மருந்து செலுத்தி அனுப்புகிறார். பின்னர், ஆதர்ஷ் திடீர் என்று சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவருடைய ஆட்களை அடித்து நொறுக்குகிறார். சில நாட்களில் அவரது முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என்று போலீஸ் கண்டுபிடிக்கிறது. இறுதியில் கஸாலி என்ன மருந்து ஆதர்ஷின் உடம்பினுள் செலுத்தினார்? எதற்காக செலுத்தினார்? இளைஞர்கள் காணாமல் போனவர்களை போலீஸ் கண்டுபிடித்தார்களா? ஆதர்ஷும் அனுகிருஷ்ணாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், கொடுத்த வேலையை சிறப்பாக முடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஸாலி. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார். மருத்துவ துறை குற்றங்களை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். அது ஓரளவிற்கு அமைந்திருக்கிறது. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவே உள்ளன.